இரக்கம் என்பது இறையின் பண்பு!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 10:36-37.
36இப்படியிருக்க, கள்ளர்கையில் அகப்பட்டவனுக்கு இந்த மூன்றுபேரில் எவன் பிறனாயிருந்தான்? உனக்கு எப்படித் தோன்றுகிறது என்றார். |
37அதற்கு அவன்: அவனுக்கு இரக்கஞ் செய்தவனே என்றான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீயும் போய் அந்தப்படியே செய் என்றான். கிறித்துவில் வாழ்வு: இரக்க மென்னும் இறைவன் பண்பை, இன்றைய மனிதர் காட்டலையே. உரக்க முழங்கும் திரு அவையாரும், உதவிட கைகள் நீட்டலையே. அரக்கு போன்று அணைத்து ஏற்கும், அன்பையும் தம்முடன் கூட்டலையே. பரக்கு பார்க்கும் இரக்கம் அந்நாள்; பயன் தரார்க்கு மீட்பிலையே! ஆமென். |