கேளுங்கள், கொடுக்கப்படும்!

கேளுங்கள் கொடுக்கப்படும்!கிறித்துவின் வாக்கு: லூக்கா 11:9-10.

9மேலும் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்.
10ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.

கிறித்துவில் வாழ்வு:
எடுக்கும் பண்பாய் வாழ்வோரிடத்து,
ஏழை கேட்பின் கொடுப்பாரா?
அடுக்கும் காசு அசையும் முன்பு,
அடுத்தவர் பெறுவதைத் தடுப்பாரா?
கொடுக்கும் பண்பு உமக்கே உண்டு;
கொடியர் கேட்பினும் கொடுப்பீரே.
தடுக்கும் மாந்தரும் தம்மையுணர;
தவற்றை இறைவா தடுப்பீரே!
ஆமென்.

பதவி எதற்காக?

பதவியும் பணியும் எதற்காக?

அரசப் பதவியும் அரசுப் பணியும்,
ஆண்டவர் அருட்கொடை அந்நாளில்.
பிறரது கண்ணீர் புரியாதவர்கள்,
பிசாசின் தூதர்கள் இந்நாளில்.
ஒருமுறையாவது நன்மை செய்தால்,
ஊரே புகழும் இன்னாட்டில்.
மறுமுறையென்று பலமுறை அலைந்தேன்;
மனிதர்கள் இல்லை என் நாட்டில்!

-கெர்சோம் செல்லையா!