மார்த்தாளைப் பழிக்காதீர்!

மார்த்தாளைப் பழிக்காதீர்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா10:40.

40மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்து, அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டுவந்திருக்கிறதைக் குறித்து உமக்குக் கவையில்லையா? எனக்கு உதவி செய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள்.
கிறித்துவில் வாழ்வு:
கோலைப் பிடித்த அரசன் முதல் 
குடிநீர் கேட்கும் ஏழைவரை,
வேலைப் பழுவில் குமுறுவது,
வெறுப்பில் அன்று, அறிவீரே.
நூலைப் படிக்கும் நாம் இன்று,
நொடியும் உதவி செய்யாமல்,
வாலைப் பிடித்து ஊர் சுற்றல்,
வழிமுறை அன்று,தெரிவீரே!
ஆமென்.