பெற்றுக்கொண்ட அன்பு!

பெற்றுக் கொண்ட மன்னிப்பு!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 11:4.

4எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும்; நாங்களும் எங்களிடத்தில் கடன்பட்ட எவனுக்கும் மன்னிக்கிறோமே; எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், என்று சொல்லுங்கள் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
பெற்றுக் கொண்ட மன்னிப்பிற்காய், 
பெரிதும் இறையைப் புகழும் நாம்,
மற்றோர் இப்படி மகிழ, புகழ,
மன்னித்தவரைச் சேர்த்தோமா?
ஒற்றை ஒரு வழிப் பாதையல்ல,
உயர்ந்த மன்னிப்பென்னும் நாம்,
கற்றுக் கொண்ட பண்பு அன்பு,
காணும்படியாய்ப் பார்ப்போமா?
ஆமென்.