இறைவிருப்பே இறையரசு!

இறைவிருப்பே இறையரசு!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 11:2.அதற்கு அவர்: நீங்கள் ஜெபம்பண்ணும்போது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக; உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக; 


கிறித்துவில் வாழ்வு:

எங்கள் வாழ்க்கை எதற்காக,

என்னும் கேள்வியின் பதிலாகத்

தங்கள் விருப்பைச் செய்துவரும்,
தந்தையின் மக்களே, கேளுங்கள்.

உங்கள் விருப்பம் உதவாது;

உன்னத ஐயனைப் புகழாது;

இங்கவர் விருப்பைச் செய்வதுதான்,

இறையரசாகும்; வாழுங்கள்!

ஆமென்.