அழைக்கப்பட்டோர்!

அழைக்கப்பட்டோர்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 14:21-24.

21  அந்த ஊழியக்காரன் வந்து, இவைகளைத் தன் எஜமானுக்கு அறிவித்தான். அப்பொழுது வீட்டெஜமான் கோபமடைந்து, தன் ஊழியக்காரனை நோக்கி: நீ பட்டணத்தின் தெருக்களிலும் வீதிகளிலும் சீக்கிரமாய்ப் போய், ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் இங்கே கூட்டிக்கொண்டுவா என்றான்.

22  ஊழியக்காரன் அப்படியே செய்து: ஆண்டவரே, நீர் கட்டளையிட்டபடி செய்தாயிற்று, இன்னும் இடம் இருக்கிறது என்றான்.

23  அப்பொழுது எஜமான் ஊழியக்காரனை நோக்கி: நீ பெருவழிகளிலும் வேலிகளருகிலும் போய், என் வீடு நிறையும்படியாக ஜனங்களை உள்ளே வரும்படி வருந்திக் கூட்டிக்கொண்டுவா;

24  அழைக்கப்பட்டிருந்த அந்த மனுஷரில் ஒருவனாகிலும் என் விருந்தை ருசிபார்ப்பதில்லை யென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றான் என்று சொன்னார்.

கிறித்துவில் வாழ்வு:

அழைக்கப்பட்ட இனம் அன்று,

ஆண்டவர் விருந்தை ஏற்காது,

பிழைப்பே வாழ்வு என்றதனால்,

பிறர்முன் அழிந்தது, அறிவீரே.

உழைப்பை நம்பும் இனமின்று,

ஒழுகும் அருளை ஏற்காது,

தழைக்கத் தவறும் செய்வதனால்,

தாழ்வடைவது, தெரிவீரே!

ஆமென்.

Leave a Reply