கல்லை உணவாய் மாற்றும் வலிமை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 4:3-4.
3 அப்பொழுது பிசாசு அவரை நோக்கி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல் அப்பமாகும்படி சொல்லும் என்றான்.
4 அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.
கிறித்துவில் வாழ்வு:
கல்லை உணவாய் மாற்றும் வலிமை,
கடவுளின் மகனில் உண்டெனினும்,
வல்லமை காட்டி, வாழ்த்துகள் வாங்க,
வல்லோன் இயேசு விரும்பவில்லை.
இல்லா வரங்கள் இருப்பதாய்க் கூறும்,
இன்றைய ஊழியர் இதை அறியின்,
பொல்லா அலகை போகவே போவான்.
புரியார் சரியாய்த் திரும்பவில்லை!
ஆமென்.