பாலை நிலத்தில் இறைவாக்கு!

பாலை நிலத்தில் இறைவாக்கு!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 3:1-2.
1 திபேரியுராயன் ராஜ்யபாரம் பண்ணின பதினைந்தாம் வருஷத்திலே, பொந்தியுபிலாத்து யூதேயாவுக்குத் தேசாதிபதியாயும், ஏரோது காற்பங்கு தேசமாகிய கலிலேயாவுக்கு அதிபதியாயும், அவன் சகோதரனாகிய பிலிப்பு காற்பங்கு தேசமாகிய இத்துரேயாவுக்கும் திராகொனித்தி நாட்டிற்கும் அதிபதியாயும், லிசானியா காற்பங்கு தேசமாகிய அபிலேனேக்கு அதிபதியாயும்,
2 அன்னாவும் காய்பாவும் பிரதான ஆசாரியராயும் இருந்தகாலத்தில் வனாந்தரத்திலே சகரியாவின் குமாரனாகிய யோவானுக்குத் தேவனுடைய வார்த்தை உண்டாயிற்று.

கிறித்துவில் வாழ்வு:
பாலை நிலத்தில் ஒலிக்குதய்யா;
படைத்தோன் வாக்கு பலிக்குதய்யா.
மாலைப் பொழுது நெருங்குதய்யா;
மகிழ்வும் மறைய விரும்புதய்யா.
நூலைப் போன்று உடையிருக்கும்;
நுண்மதி கொண்டு எண்ணுமய்யா;
வேலைக் கேற்ப விளைவிருக்கும்;
விண்ணின் விருப்பைப் பண்ணுமய்யா!
ஆமென்.

பேறாகும்!

பேறாகும்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 2:51-52.
51 பின்பு அவர் அவர்களுடனே கூடப்போய், நாசரேத்தூரில் சேர்ந்து, அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார். அவருடைய தாயார் இந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்துக் கொண்டாள்.
52 இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்.

கிறித்துவில் வாழ்வு:
பெற்றோருக்குப் பணிந்து நடத்தல்,
பிள்ளையின் வாழ்வில் பேறாகும்.
கற்றோர் உணர்ந்து கடைபிடிப்பின்,
காணும் இன்பம் நூறாகும்.
சுற்றும் உலகில் சேர்ந்து வாழ்தல்,
சுமையை இறக்கும் அருளாகும்.
மற்றோர் மகிழ நன்மை செய்வின்
மனித வாழ்க்கை பொருளாகும்!
ஆமென்.

Image may contain: text