உயிர்ப்பு!
வாக்கு: யோவான் 11:23-26.
வாழ்வு:
இறப்பின் பின்னர் எது நடக்கும்?
எம்மறிவிற்குத் தெரியலையே!
பிறப்பின் ஏதும் புதிராயிருக்கும்;
பேசும் உயிர்ப்பும் புரியலையே!
திறப்பின் வாசல் எதுவாயிருக்கும்?
தெய்வம் தவிர பேறிலையே.
சிறப்பின் வாழ்வு நமதாயிருக்கும்;
சேர்க்க, பற்றன்றி வேறிலையே!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.