எதைச் செய்தாலும்!
எதைச் செய்தாலும் இறைவனுக்கென்றே,
எண்ணிச் செய்வீர் நண்பரே.
இதைச் சொல்லுகிற அடியனும் நன்றே,
எண்ண வேண்டும் அன்பரே.
விதைக்கிற விதையைச் செடி மரமாக்கி,
விளையச் செய்பவர் தெய்வமே.
புதைக்கிறத் தொழிலாய், பொய் விதைக்காது,
புனிதம் நட்டால் உய்வமே!
-செல்லையா.