இடற வைக்கும் கல்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 17:1-2.
1 பின்பு அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: இடறல்கள் வராமல்போவது கூடாதகாரியம், ஆகிலும் அவைகள் எவனால் வருகிறதோ, அவனுக்கு ஐயோ!
2 அவன் இந்தச் சிறுவரில் ஒருவனுக்கு இடறலுண்டாக்குகிறதைப் பார்க்கிலும், அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல் கட்டப்பட்டு, அவன் சமுத்திரத்தில் தள்ளுண்டுபோவது அவனுக்கு நலமாயிருக்கும்.
கிறித்துவில் வாழ்வு:
ஒடுக்கப்பட்ட ஏழைகளை
ஒன்றிற்குதவார் என்றெண்ணி,
தடுக்கல் இட்டுப் பின்தள்ளும்,
தவற்றின் உருவாம் மானிடரே,
எடுக்கும் அந்தப் பாறாங்கல்,
எந்திரக் கல்லாய் உம் கழுத்தில்,
அடுக்கப்பட்டு கடல் தள்ளும்,
அழிவை உணர்ந்தால், ஏனிடரே?
ஆமென்.