தொடரும் ஊரடங்கு!
நாற்பது நாட்கள் நோன்பிருக்கும்,
நம் திரு நாட்டின் உறவுகளே,
தோற்பது தொற்று நோயாயிருக்கும்.
தொடர்ந்து வீட்டில் வேண்டுங்களே.
ஏற்படுந் துன்பம் என்று போகும்,
என்றறியா நம் அரசுகளே,
பார்ப்பது யாரை? பாரும் ஏழை;
பரிவில் உதவி, தாண்டுங்களே!
கெர்சோம் செல்லையா.