பதிலும் வரும்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 16:25-26.
25 அதற்கு ஆபிரகாம்: மகனே, நீ பூமியிலே உயிரோடிருக்குங் காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய், லாசருவும் அப்படியே தீமைகளை அநுபவித்தான், அதை நினைத்துக்கொள்; இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய்.
26 அதுவுமல்லாமல், இவ்விடத்திலிருந்து உங்களிடத்திற்குக் கடந்துபோகவும், அவ்விடத்திலிருந்து எங்களிடத்திற்குக் கடந்துவரவும் மனதுள்ளவர்களுக்குக் கூடாதபடிக்கு, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே பெரும்பிளப்பு உண்டாக்கப்பட்டிருக்கிறது என்றான்.
கிறித்துவில் வாழ்வு:
பிறப்பு வரும், பின்னால் வாழ்க்கை வரும்.
பிணிகள் வரும், பிழைக்கும் நலமும் வரும்.
சிறப்பு வரும், சிறுமையைத் தாண்டின் வரும்.
சிரிப்பும் வரும், சிந்தும் நீரினிலே வரும்.
இறப்பு வரும், இதன்பின் என்ன வரும்?
இறவா நிலைவாழ்வு எங்கு வரும்?
பறப்பு வரும், பற்பல வினாவும் வரும்.
பதிலும் வரும், பரிசு ஏசுவிலே வரும்!
ஆமென்.