இறந்தவன் எழுந்து வந்தாலும் ஏற்பதில்லை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 16:27-28.
27 அப்பொழுது அவன்: அப்படியானால், தகப்பனே, எனக்கு ஐந்துபேர் சகோதரருண்டு, அவர்களும் வேதனையுள்ள இந்த இடத்துக்கு வராதபடி, அவன் போய் அவர்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும் பொருட்டு,
28 நீர் அவனை என் தகப்பன் வீட்டுக்கு அனுப்பும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
கிறித்துவில் வாழ்வு:
செத்தவன் சொன்னதும் கேட்டதில்லை.
செத்துப் பிழைப்பினும் பார்ப்பதில்லை.
சித்து விளையாட்டிவை தேவையில்லை.
சிந்திக்கவே எனக்கு நேரமில்லை.
இத்தரை மாந்தரில் பெரும்பாலோர்,
இப்படி நினைப்பதில் வியப்புமில்லை.
மொத்தமும் போகும் நாள்வரையில்,
மீட்பரைச் சொல்வதில் பயனுமில்லை!
ஆமென்.