வழக்கிலிருந்து விடுதலை தந்தார்!

வழக்கிலிருந்து  விடுதலை தந்தார்!

வழக்கு, வாது, வம்புகள் என்று,
வருத்தம் கொடுத்தார் அன்னாட்டார்.
முழக்கும் வாக்கை நாவில் தந்து,
மும்மை இறையோ எனை மீட்டார்.
உழைக்கும் எண்ணம் இல்லார் இன்று,
ஊரில் இருளாய்க் கெடுக்கின்றார்.
கிழக்கில் தோன்றும் கதிரோன் போன்று,
கிறித்துவோ வெளிச்சம் கொடுக்கின்றார்!
ஆமென்.
பி.கு:
மைசூர் மாநில நடுவர் மன்றமொன்றில்
என் மீது தொடுக்கப்பட்ட வழக்கு ஒன்றை
வழக்குரைஞர் வைக்காமல் நடத்த
ஆண்டவர் அருள் புரிந்தார்.
கை சூட்டி குற்றம் சாட்ட இயலாமல்,
வழக்கு தொடுத்தோர் ஓடும் காட்சியைக்
காணச் செய்து, விடுதலையும் தந்தார்.
நடுவராய் விடுதலை தந்த தந்தைக்கும்,
வழக்குரைஞராய் பரிந்து பேசிய மைந்தனுக்கும்,
சான்று பகர்ந்த ஆவியருக்கும் நன்றி, நன்றி.
-கெர்சோம் செல்லையா.
வழக்கிலிருந்து  விடுதலை தந்தார்!

வழக்கு, வாது, வம்புகள் என்று,
வருத்தம் கொடுத்தார் அன்னாட்டார்.
முழக்கும் வாக்கை நாவில் தந்து,
மும்மை இறையோ எனை மீட்டார்.
உழைக்கும் எண்ணம் இல்லார் இன்று,
ஊரில் இருளாய்க் கெடுக்கின்றார்.
கிழக்கில் தோன்றும் கதிரோன் போன்று,
கிறித்துவோ வெளிச்சம் கொடுக்கின்றார்!
ஆமென்.

பி.கு:
மைசூர் மாநில நடுவர் மன்றமொன்றில் 
என் மீது தொடுக்கப்பட்ட வழக்கு ஒன்றை 
வழக்குரைஞர் வைக்காமல் நடத்த 
ஆண்டவர் அருள் புரிந்தார்.
கை சூட்டி குற்றம் சாட்ட இயலாமல், 
வழக்கு தொடுத்தோர் ஓடும் காட்சியைக் 
காணச் செய்து, விடுதலையும் தந்தார்.
நடுவராய் விடுதலை தந்த தந்தைக்கும், 
வழக்குரைஞராய் பரிந்து பேசிய மைந்தனுக்கும்,
சான்று பகர்ந்த ஆவியருக்கும் நன்றி, நன்றி.
-கெர்சோம் செல்லையா.

 

நேர்மையை இன்னும் பெறுவோமே!

நேர்மையை இன்னும் பெறுவோமே!

நற்செய்தி மாலை:மாற்கு 2:6-7.
“அங்கே அமர்ந்திருந்த மறைநூல் அறிஞர் சிலர், ‘ இவன் ஏன் இப்படிப் பேசுகிறான்? இவன் கடவுளைப் பழிக்கிறான். கடவுள் ஒருவரே அன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்? ‘ என உள்ளத்தில் எண்ணிக் கொண்டிருந்தனர்.”
நற்செய்தி மலர்:
இறைமகன் வந்து இயம்பும்போது
இழிவாய் எண்ணிப் பழித்தாரே.
குறைகள் மிகுந்த ஊழியர் நம்மைக்
குற்றம் கூறிதான் பழிப்பாரே.
அறையும் ஆணியாய் அடித்துப் பேசல்
ஆவியர் வலிமை, அறிவோமே.
நிறையும் அருளை என்று வேண்டி,
நேர்மையை இன்னும் பெறுவோமே!
ஆமென்.
நேர்மையை இன்னும் பெறுவோமே!
நற்செய்தி மாலை:மாற்கு 2:6-7.
"அங்கே அமர்ந்திருந்த மறைநூல் அறிஞர் சிலர், ' இவன் ஏன் இப்படிப் பேசுகிறான்? இவன் கடவுளைப் பழிக்கிறான். கடவுள் ஒருவரே அன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்? ' என உள்ளத்தில் எண்ணிக் கொண்டிருந்தனர்."
நற்செய்தி மலர்:
இறைமகன் வந்து இயம்பும்போது
இழிவாய் எண்ணிப் பழித்தாரே.
குறைகள் மிகுந்த ஊழியர் நம்மைக்
குற்றம் கூறிதான் பழிப்பாரே.
அறையும் ஆணியாய் அடித்துப் பேசல்
ஆவியர் வலிமை, அறிவோமே.
நிறையும் அருளை என்று வேண்டி,
நேர்மையை இன்னும் பெறுவோமே!
ஆமென்.

சுமந்து வந்தவர் பற்று!

சுமந்து வந்தவர் பற்று!
நற்செய்தி மாலை:மாற்கு 2:3-5.
“அப்போது முடக்குவாதமுற்ற ஒருவரை நால்வர் சுமந்து அவரிடம் கொண்டுவந்தனர். மக்கள் திரண்டிருந்த காரணத்தால் அவரை இயேசுவுக்கு முன் கொண்டுவர இயலவில்லை. எனவே அவர் இருந்த இடத்திற்கு மேலே வீட்டின் கூரையை உடைத்துத் திறப்பு உண்டாக்கி, முடக்குவாதமுற்றவரைப் படுக்கையோடு கீழே இறக்கினர். இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு, முடக்குவாதமுற்றவரிடம், ‘ மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன ‘ என்றார்.”

நற்செய்தி மலர்:
சுமந்து வந்தவர் பற்றினைக்கொண்டு
சுமையாய் வந்தவர் எழும்பியதுண்டு.
உமது பார்வையின் ஆழம் கொண்டு,
உயிர் வாழ்கின்றோம் உம்மைக் கண்டு.
எமது நடுவிலும் நோய்கள் கொண்டு,
எழும்ப இயலாதவர்கள் உண்டு.
அமர்ந்து கேட்கும் அடியவர் கண்டு,
அதிசயம் செய்யும் அன்பைக்கொண்டு!
ஆமென்.

சுமந்து வந்தவர் பற்று!
நற்செய்தி மாலை:மாற்கு 2:3-5.
"அப்போது முடக்குவாதமுற்ற ஒருவரை நால்வர் சுமந்து அவரிடம் கொண்டுவந்தனர். மக்கள் திரண்டிருந்த காரணத்தால் அவரை இயேசுவுக்கு முன் கொண்டுவர இயலவில்லை. எனவே அவர் இருந்த இடத்திற்கு மேலே வீட்டின் கூரையை உடைத்துத் திறப்பு உண்டாக்கி, முடக்குவாதமுற்றவரைப் படுக்கையோடு கீழே இறக்கினர்.  இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு, முடக்குவாதமுற்றவரிடம், ' மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன ' என்றார்."

நற்செய்தி மலர்:
சுமந்து வந்தவர் பற்றினைக்கொண்டு 
சுமையாய் வந்தவர் எழும்பியதுண்டு.
உமது பார்வையின் ஆழம் கொண்டு,
உயிர் வாழ்கின்றோம் உம்மைக் கண்டு.
எமது நடுவிலும் நோய்கள் கொண்டு,
எழும்ப இயலாதவர்கள் உண்டு.
அமர்ந்து கேட்கும் அடியவர் கண்டு, 
அதிசயம் செய்யும் அன்பைக்கொண்டு!
ஆமென்.
Like ·  · Share