சேரனும் பாண்டியும் ஆண்ட அந்நாட்டை,
கேரளம் என்று மாற்றி விட்டார்கள்.
வேருடன் மரத்தை வெட்டிடும் கோடரி
விளைநிலம் அமைத்த கதை புனைந்தார்கள்.
பாரினை ஆண்ட பழம் பெருங்குடிகள்
படைவலி இழந்து தாழ்ந்துவிட்டார்கள்.
வாருங்கள் அருமை நண்பராய் நீங்கள்,
வரலாற்றின் பிழை திருத்திவிடுங்கள்!