வழக்கிலிருந்து விடுதலை தந்தார்!
வழக்கு, வாது, வம்புகள் என்று,
வருத்தம் கொடுத்தார் அன்னாட்டார்.
முழக்கும் வாக்கை நாவில் தந்து,
மும்மை இறையோ எனை மீட்டார்.
உழைக்கும் எண்ணம் இல்லார் இன்று,
ஊரில் இருளாய்க் கெடுக்கின்றார்.
கிழக்கில் தோன்றும் கதிரோன் போன்று,
கிறித்துவோ வெளிச்சம் கொடுக்கின்றார்!
ஆமென்.
பி.கு:
மைசூர் மாநில நடுவர் மன்றமொன்றில்
என் மீது தொடுக்கப்பட்ட வழக்கு ஒன்றை
வழக்குரைஞர் வைக்காமல் நடத்த
ஆண்டவர் அருள் புரிந்தார்.
கை சூட்டி குற்றம் சாட்ட இயலாமல்,
வழக்கு தொடுத்தோர் ஓடும் காட்சியைக்
காணச் செய்து, விடுதலையும் தந்தார்.
நடுவராய் விடுதலை தந்த தந்தைக்கும்,
வழக்குரைஞராய் பரிந்து பேசிய மைந்தனுக்கும்,
சான்று பகர்ந்த ஆவியருக்கும் நன்றி, நன்றி.
-கெர்சோம் செல்லையா.