அதிசயம்!

இரண்டாம் அதிசயம்!
நற்செய்தி: யோவான் 4:51-54.

நல்வழி:


எப்பொழுதாயினும், எவ்விடமாயினும்,

இயேசுவின் வாக்கு நிறைவேறும்.

அப்பொழுதங்கே அளித்தது எனினும்,

அடியருக்கின்று மகிழ்வூறும். 

இப்படியாக நடைபெறுமதிசயம்,  


எண்ணிப் பார்ப்போம், நீர் வாரும்.

முப்பொருளுணர்ந்து, முதிச்சியடைந்து,

மும்மை தெய்வப் புகழ்கூறும்!

ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

பார்க்கின்றார்!

பார்க்கின்றார்!

நற்செய்தி: யோவான் 4:46-50.46.

பின்பு, இயேசு தாம் தண்ணீரைத் திராட்சரசமாக்கின கலிலேயாவிலுள்ள கானா ஊருக்கு மறுபடியும் வந்தார்; அப்பொழுது கப்பர்நகூமிலே ராஜாவின் மனுஷரில் ஒருவனுடைய குமாரன் வியாதியாயிருந்தான்.47. இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தாரென்று அந்த மனுஷன் கேள்விப்பட்டபோது, அவரிடத்திற்குப் போய், தன் மகன் மரண அவஸ்தையாயிருந்தபடியினாலே, அவனைக் குணமாக்கும்படிக்கு வரவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான்.48. அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீங்கள் அடையாளங்களையும் அற்புதங்களையும் காணாவிட்டால் விசுவாசிக்கமாட்டீர்கள் என்றார்.49. அதற்கு ராஜாவின் மனுஷன்: ஆண்டவரே, என் பிள்ளை சாகிறதற்குமுன்னே வரவேண்டும் என்றான்.50. இயேசு அவனை நோக்கி: நீ போகலாம், உன் குமாரன் பிழைத்திருக்கிறான் என்றார். அந்த மனுஷன், இயேசு சொன்ன வார்த்தையை நம்பிப் போனான்.

நல்வழி:

பற்றறிவோடும் பார்க்கின்றார்;

பட்டறிவோடும் பார்க்கின்றார்.

சிற்றறிவோடும் பார்க்கின்றார்;

சிறப்பறிவோடும் பார்க்கின்றார்

உற்றவராகியும் பார்க்கின்றார்.

உணராதவரும் பார்க்கின்றார்.

எற்றிசையாரும் பார்க்கின்றார்.

ஏசுவில் அதிசயம் பார்க்கின்றார்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

இரக்கமற்றோர்!


இரக்கம் உருக்கம் இல்லாதாரே,

இங்கே தலைவர் ஆகின்றார். 

அரக்கர் அரக்கி என்கின்றாரே;

அவரால் எளியர் சாகின்றார்.

உறக்கம் ஓய்வு உண்ணாதாரே, 

உழவர் வடிவில்  நோகின்றார்.

மறக்கும் மக்கள் மதி கெட்டாரே;

மடையர்  அழியப் போகின்றார்!


-கெர்சோம் செல்லையா.

பார்ப்பவரே!
நற்செய்தி: யோவான் 4:45.  

நல்வழி: 

பார்ப்பவர் பார்ப்பதைச் சொல்லுங்கள். 

பலபேர் பார்க்க இது உதவும். 

சேர்ப்பவர் பகிர்ந்திடச் செல்லுங்கள்.

சிலபேர்க்கேனும் அது உதவும்.

தோற்பவர் மீளவும் நில்லுங்கள்.

தோல்வி ஆளவே தீதுதவும்.

ஏற்பவர் யாவரும் வெல்லுங்கள்.


இறையின் அன்புத் தூதுதவும்!

ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

ஊர் ஒதுக்கும்!

யோவான்4: 43-44

ஊர் ஒதுக்கும், உறவொதுக்கும்,

உடன் பிறப்பும் நமை ஒதுக்கும்;

பேர் சிறந்தோர் என்றழைக்கும்,

பெருமை வருமுன் ஒதுக்கும்.

யார் ஒதுக்கிக் கை விடினும்,

இறையுண்டு, அவர் ஒதுக்கார்.

நேர் கோடே எளிதிணைக்கும்;

நினைத்து வழி இனி புதுக்கும்!

யாருக்கு மதிப்பு?

அடியரா? ஆண்டவரா?

நற்செய்தி: யோவான் 4:41-42. 41.

அப்பொழுது அவருடைய உபதேசத்தினிமித்தம் இன்னும் அநேகம்பேர் விசுவாசித்து,42. அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள்.

நல்வழி:

வாக்குரைக்கும் அடியருக்கு,

வழங்குகின்ற மதிப்பை,

ஆக்குகின்ற இறைவனுக்கு,

அளிப்பாயா மனிதா?

தூக்கியுன்னை உயர்த்துகின்ற,

தூயவரின் கரத்தை,

போக்குரைத்து உதறுவது,

போதாதோ? இனி வா!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

பிரிவினை வேண்டாம்!

மனிதம் பிரிக்கும் மடையோரே!
நற்செய்தி: யோவான் 4:39-40.

39. நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார் என்று சாட்சி சொன்ன அந்த ஸ்திரீயினுடைய வார்த்தையினிமித்தம் அந்த ஊரிலுள்ள சமாரியரில் அநேகர் அவர்மேல் விசுவாசமுள்ளவர்களானார்கள்.

40. சமாரியர் அவரிடத்தில் வந்து, தங்களிடத்தில் தங்கவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; அவர் இரண்டுநாள் அங்கே தங்கினார்.

நல்வழி:

இரு பத்து நூறு ஆண்டுகள் முன்பு,

யூதரில் இருந்த  இனவெறியின்,

மறு பதிப்பென்று சாதியை வைத்து,

மனிதம் பிரிக்கும் மடையோரே,

ஒரு குலமாக இணைவீர் என்று,

இயேசு தருகிற  இறையன்பின்,

திருவடி கண்டு, திருந்துவோர்தான், 


தெய்வப் பண்பு உடையோரே! 


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

நட்டவன் ஒருவன்!

நட்டவன் ஒருவன்!


நற்செய்தி : யோவான் 4:36-38.

நல்வாழ்வு:


நட்டவன் ஒருவன் நனைத்தவன் ஒருவன்.

நற்பயன் தருவதோ நம்மிறைவன்.

இட்டவன் ஒருவன் எடுத்தவன் ஒருவன்,

எனினும் தருவான் நல்லிறைவன்.

விட்டவன் ஒருவன், விரும்பின் பெறுவன்,

விடுதலை ஈவதோ நம்மிறைவன்.

கெட்டவன் திருந்தின், கேட்பது பெறுவன்; 

கிறித்து அன்பே நல்லிறைவன்!


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

அறுவடை!

அறுவடை மிகுதி!

நற்செய்தி: யோவான் 4:35.

35. அறுப்புக்காலம் வருகிறதற்கு இன்னும் நாலுமாதம் செல்லும் என்று நீங்கள் சொல்லுகிறதில்லையா? இதோ, வயல்நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறதென்று உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

நல்வழி:

நான்கு திங்கள் அறுக்காது,

நல்விளைச்சல் விடுவாரோ?

தூங்குபவரை ஒறுக்காது,

தொழிலிழந்து கெடுவாரோ?

தேங்கு மந்தம் பொறுக்காது,

திருமறையை எடுப்போமே.

ஏங்குகின்றார் இறைமகனார்;

இன்தொண்டிற்கு நடப்போமே!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.