உயர்ந்து நின்ற ஒருவரைத் தேர்ந்து,
உடனடி அரசர் ஆக்குகிறார்.
நயந்து செய்கிற நல்லோர் போன்று,
நடித்து நாள் அவர் போக்குகிறார்.
அயர்ந்து கிடக்கிற இசரயெல்லரை,
அந்த சவுலும் காக்கவில்லை.
ஐயோ, அதுபோல் பலரைக் கண்டோம்.
அவரும் இறை நோக்கவில்லை!
(1 சாமுவேல் 9-31)