எப்படி மனிதர் செயல் புரிந்தாரோ,
யார் யாருக்குத் தீங்கிழைத்தாரோ,
அப்படி அவரும் அடைந்தது காட்டும்,
அறிவுத் திருமறை வாசிப்பீரே.
இப்படி நம்மைத் திருத்தியமைக்கும்,
இதுவே வாழ்வு என்றும் உணர்த்தும்,
செப்பிட இயலா ஆசிகள் நிறைந்த,
செயல்வழி நூலிதை நேசிப்பீரே!
(நீதித் தலைவர்கள்: 1:1-7;8:30-9:57)