அமைதி பெறுவீர்!

அமைதி பெறுவீர்!
இறைவாக்கு: லூக்கா 2:27-32.
27 அவன் ஆவியின் ஏவுதலினால் தேவாலயத்திலே வந்திருந்தான். இயேசு என்னும் பிள்ளைக்காக நியாயப்பிரமாண முறைமையின்படி செய்வதற்குத் தாய் தகப்பன்மார் அவரை உள்ளே கொண்டு வருகையில்,
28 அவன் அவரைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு, தேவனை ஸ்தோத்திரித்து:
29 ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்;
30 புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும்,
31 தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின
32 உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான்.

இறைவாழ்வு:
ஆண்டவர் மீட்பை அறிந்தவர் மட்டும்,
அமைதியை வாழ்வில் பெற்றிடுவார்.
மாண்டவர் இயேசுவை ஏற்காததினால்,
மனதினில் தோல்வி உற்றிடுவார்.
மீண்டவராக உள்ளம் மகிழ,
மீட்பர் இயேசுவை ஏற்றிடுவீர்.
தாண்டிச் செல்லும் புயல்களெல்லாம்;
தாங்கும் அவரைப் போற்றிடுவீர்!
ஆமென்.

Image may contain: ocean, cloud, text, nature and water
LikeShow More Reactions

Comment

ஓர் ஏழையின் ஏக்கம்!

ஓர் ஏழையின் ஏக்கம்!

பார்ப்பன பனியா நிறுவனம் வளர,
பரிசளித்தோமா இந்தியா?
தோற்பவர் இங்கே ஏழை எளியர்;
துயரில் தள்ளவே வந்தியா?
ஆர்ப்பரிப்போடு பேசிய வாக்கு,
‘அச்சே தின’த்தைத் தந்தியா?
சேர்ப்பது என்றும் ஏழையர் வாக்கு!
சிறியருக்கிரங்க முந்தையா!

-கெர்சோம் செல்லையா.

இறை காண்போம்!

இறை காண்போம்!

மெய்யே இறையென்று,
மேதினியில் நாம் சொல்வோம்.
பொய்யும் அதன் விளைவும், 
பொய்த்திடவே, அதை வெல்வோம்.
செய்வது நன்மையென்றால்,
செய்பவர் இறையென்போம்.
ஐயம் இனி வேண்டாம்.
அன்பினில் இறை காண்போம்!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: flower, plant, nature and text
LikeShow More Reactions

Comment

இறைவழி!

இறைவழி!

இருக்கும் இடத்தை ஏதேனாக்கும்
எளிய தொண்டில் இறை பாரும்.
செருக்கும் வெறுப்பும் தீங்குருவாக்கும்.
செய்ய மறுப்பின் குறை தீரும்.
பெருக்கும் ஊற்றாய் அன்பு சுரக்கும்
பெருந் தன்மையே இறையாகும்.
நெருக்கும் தொல்லை தருவோருக்கும்,
நேர்மைப் பரிசே, முறையாகும்!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: one or more people, plant, tree and outdoor
LikeShow More Reactions

Comment