உருவிய கத்தி!

உருவிய கத்தி!
இறைவாக்கு: லூக்கா 2:33-35
33 அவரைக்குறித்துச் சொல்லப்பட்டவைகளுக்காக யோசேப்பும் அவருடைய தாயாரும் ஆச்சரியப்பட்டார்கள்.
34 பின்னும் சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து, அவருடைய தாயாகிய மரியாளை நோக்கி: இதோ, அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படத்தக்கதாக, இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும், இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
35 உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும் என்றான்.

இறைவாழ்வு:
உண்மை ஒழுக்கம் என்பவர் வாழ்வில்
உருவிய கத்தி பாய்கிறதே.
பெண்ணின் பெருமையாகும் மரிமேல்,
பெரிய துன்பம் சாய்கிறதே!
எண்ணிப் பார்த்தால் இவற்றில்கூட
இறையின் அனுமதி தெரிகிறதே.
கண்ணைமூடி ஒப்புக் கொடுப்போம்;
கடவுளின் மீட்பு புரிகிறதே!
ஆமென்.

No automatic alt text available.