மலையைப் பெயர்க்கும் பற்று!

மலையைப் பெயர்க்கும் பற்று!
நற்செய்தி மாலை:மாற்கு 11:20-23.
“காலையில் அவர்கள் அவ்வழியே சென்றபோது அந்த அத்தி மரம் வேரோடு பட்டுப்போயிருந்ததைக் கண்டார்கள். அப்போது பேதுரு நடந்ததை நினைவுகூர்ந்து அவரை நோக்கி, ‘ ரபி, அதோ நீர் சபித்த அத்திமரம் பட்டுப்போயிற்று ‘ என்றார். அதற்கு இயேசு அவர்களைப் பார்த்து, ‘ கடவுள்மீது நம்பிக்கை கொள்ளுங்கள். உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; எவராவது இந்த மலையைப் பார்த்து, ‘ பெயர்ந்து கடலில் விழு ‘ எனத் தம் உள்ளத்தில் ஐயம் எதுவுமின்றி நம்பிக்கையுடன் கூறினால், அவர் சொன்னவாறே நடக்கும்”.
நற்செய்தி மலர்:
மலையைப் பெயர்த்துக் கடலில் கொட்டும்,
மாபெரும் பற்றும் எனக்கில்லை.
கலையழகுள்ள சிலைபோல் கட்டும்,
கைத்திறன் அறிவும் எனக்கில்லை.
விலை மதிப்பில்லா பொருளாய்க் கிட்டும்,
விண்ணின் அன்பும் எனில் இல்லை.
இலைபோல் வாடும் நிலையை ஓட்டும்,
இயேசுவைப் பார்த்தேன், குறைவில்லை!
ஆமென்.

Leave a Reply