அன்புச் சினத்தில் தீங்கில்லை.
நற்செய்தி மாலை: மாற்கு 10:13-16.
“சிறு பிள்ளைகளை இயேசு தொட வேண்டுமென்று அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டுவந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர். இயேசு இதைக் கண்டு, கோபம் கொண்டு, ‘ சிறு பிள்ளைகளை என்னிடம் வர விடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது. இறையாட்சியைச் சிறு பிள்ளையைப்போல் ஏற்றுக் கொள்ளாதோர் அதற்கு உட்படமாட்டார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்’ என்றார். பிறகு அவர் அவர்களை அரவணைத்து, தம் கைகளை அவர்கள்மீது வைத்து ஆசி வழங்கினார்.”
நற்செய்தி மலர்:
இயேசுவின் சினத்தைப் பாருங்கள்;
எதற்கென நினைவு கூருங்கள்.
பேசும் இறையிலும் சினம் உண்டு.
புரிவீர் நீங்கள் இது கண்டு.
ஆசு நீக்கும் அருள் நெஞ்சின்
அன்புச் சினத்தில் தீங்கில்லை.
ஏசும் மனிதர் நெஞ்சத்தில்
இருக்கும் வெறுப்பும் ஈங்கில்லை!
ஆமென்.