ஊசியின் காதினுள் ஒட்டகமா?
நற்செய்தி மாலை: மாற்கு 10:22-25.
“இயேசு சொன்னதைக் கேட்டதும் அவர் முகம்வாடி வருத்தத்தோடு சென்று விட்டார். ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது. இயேசு சுற்றிலும் திரும்பிப் பார்த்துத் தம் சீடரிடம், ‘ செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம் ‘ என்றார். சீடர்கள் அவர் சொன்னதைக் கேட்டுத் திகைப்புக்கு உள்ளானார்கள். மீண்டும் இயேசு அவர்களைப் பார்த்து, ‘ பிள்ளைகளே, செல்வர்கள் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம். அவர்கள் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது ‘ என்றார்.”
தூசினால் சிவந்த கண்ணால் பார்த்தேன்;
தூய்மை மறுத்து, வெறுத்துத் துறந்தேன்.
காசினால் யாவையும் வாங்க முயன்றேன்;
கடவுளும் வேண்டாம் என்று பறந்தேன்.
ஊசியின் காதினுள் நுழைவேன் என்றேன்;
ஒட்டகமாகி நான் உண்மை மறந்தேன்.
பாசியாய்ப் படரும் அழுக்கால் நிறைந்தேன்;
பரிந்து நீர் கழுவும், இலையேல் இறப்பேன்!