எங்கிருக்க வேண்டும் என்றறிவோம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 20:45-47
45 பின்பு ஜனங்களெல்லாரும் கேட்கையில் அவர் தம்முடைய சீஷரை நோக்கி:
46 நீண்ட அங்கிகளைத் தரித்துக்கொண்டு திரியவும், சந்தை வெளிகளில் வந்தனங்களை அடையவும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களில் உட்காரவும், விருந்துகளில் முதன்மையான இடங்களில் இருக்கவும் விரும்பி,
47 விதவைகளின் வீடுகளைப் பட்சித்து, பார்வைக்கு நீண்ட ஜெபம்பண்ணுகிற வேதபாரகரைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள், அவர்கள் அதிக ஆக்கினையை அடைவார்கள் என்றார்.
கிறித்துவில் வாழ்வு:
முதலிடம் பிடிக்க ஓடுகிறோம்;
முதல்வராய் இருக்க நாடுகிறோம்.
வித விதமான விளம்பரத்தால்,
வெற்றி வருமெனத் தேடுகிறோம்.
அதனதன் இடத்தில் இருப்பதுதான்,
ஆண்டவர் கூறும் அறிவுரையாம்;
இதனை நம் உடல் உறுப்பினின்று,
இன்றே கற்பது நெறிமுறையாம்!
ஆமென்.