ஆட்சியுரிமை!
இறை மொழி: யோவான் 19:10-11.
10. அப்பொழுது பிலாத்து: நீ என்னோடே பேசுகிறதில்லையா? உன்னைச் சிலுவையில் அறைய எனக்கு அதிகாரமுண்டென்றும், உன்னை விடுதலைபண்ண எனக்கு அதிகாரமுண்டென்றும் உனக்குத் தெரியாதா என்றான்.
11. இயேசு பிரதியுத்தரமாக: பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாதிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமுமிராது; ஆனபடியினாலே என்னை உம்மிடத்தில் ஒப்புக்கொடுத்தவனுக்கு அதிக பாவமுண்டு என்றார்.
இறை வழி:
ஆளும் உரிமை ஆண்டவர் தருவது.
அறிந்து ஆள்பவர், யார் இங்கே?
வாழும் உரிமை அனைவர்க்குரியது.
வழி மறுப்பதால், போர் இங்கே.
தாழும் நிலைக்குத் தள்ளிக் கெட்டது
தன்னலமாகும், கேள் இங்கே.
நீளும் துன்பம் முடிக்கப்பட்டது,
நேர்மையிலாகும்; வாழ் இங்கே!
ஆமென்.