இந்தியா!

101-ஆம் நாடு!

நூற்று நாற்பது கோடிகள் என்று,

நுண்மதி யாளர் வாழ்நாட்டில், 

தேற்று வாருடன் உணவும் அற்று,

திரிகிற இந்தியர்,  ஏன் நண்பா?

போற்றுகின்ற  பொருளியலறிவு

புதைந்திருக்கும் வளநாட்டில்,

மாற்று ஆடையே இல்லாருக்கு,

மடை மாறுமா, என் நண்பா?

-கெர்சோம் செல்லையா.

2021ம் ஆண்டுக்கான உலக பட்டினிக் குறியீட்டில் 116 நாடுகளில் இந்தியா 101-வது இடத்துக்கு சரி்ந்துள்ளது. அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம் ஆகியவற்றைவிட இந்தியாவில் பட்டினியால் வாடுவார் அதிகரித்துள்ளனர்.உலகளவில் பட்டினிச் சாவு, சரிவிகித சத்துணவு மக்களுக்குக் கிடைப்பது ஆகியவற்றைக் கண்டறிந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அயர்லாந்தைச் சேர்ந்த கன்சர்ன் வேர்ல்ட்வைட் அமைப்பு, மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்ப் ஆகிய அமைப்பும், சேர்ந்து தயாரித்த அறிக்கையில், இ்ந்தியாவில் பட்டினியின் அளவு அபாயக்கட்டத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு 107 நாடுகளுக்கான பட்டியலில், 94-வது இடத்தில் இருந்த இந்தியா, 116 நாடுகளுக்கான பட்டியலில் 2021ம் ஆண்டில் 101வது இடத்துக்கு பின்தங்கியுள்ளது.இந்தியாவை விட மோசமாக 15 நாடுகள் உள்ளன. பப்புவா நியூ கினியா(102), ஆப்கானிஸ்தான்(103), நைஜிரியா(103) காங்கோ(105), மொசாம்பிக்(106),சியா லியோன்(106), தைமூர் லெஸ்டி(108), ஹெய்தி(109),லைபீரியா(110),மடகாஸ்கர்(111), காங்கோ ஜனநாயகக் குடியரசு(112), சாட்(113),மத்திய ஆப்பிரிக்ககுடியரசு(114),ஏமன்(115), சோமாலியா(116) நாடுகள் உள்ளன.)

-தமிழ் இந்து