வேளையறிந்து உணவூட்டும்…

வேளையறிந்து கொடுப்பவர்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:29-30.

29ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று, நீங்கள்கேளாமலும் சந்தேகப்படாமலும் இருங்கள்.
30இவைகளையெல்லாம் உலகத்தார் நாடித் தேடுகிறார்கள்; இவைகள் உங்களுக்கு வேண்டியவைகளென்று உங்கள் பிதாவானவர் அறிந்திருக்கிறார்.
கிறித்துவில் வாழ்வு:
வேளையறிந்து ஊணுடையளிக்கும்,
விண்ணின் அரசைப் போற்றுகிறேன்.
நாளைக்கென்று நமக்குச் சேர்க்கும்,
நல்லிறையைத்தான் ஏற்றுகிறேன்.
ஆளைப் பார்த்துக் கையேந்தாமல்,
அவர் புகழ்மாலை சாற்றுகிறேன்.
தாளைப் பிடித்துத் தாழ்ந்துபோகும்
தரணிமீள உரை ஆற்றுகிறேன்!
ஆமென்.