ஐயம் கொள்ளும் அடியவரே!

ஐயம் கொள்ளும் அடியவரே!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 7:17-19.
17 இந்தச் செய்தி யூதேயா தேசமுழுவதிலும் சுற்றியிருக்கிற திசைகள் யாவற்றிலும் பிரசித்தமாயிற்று.
18 இவைகளையெல்லாம் யோவானுடைய சீஷர்கள் அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது யோவான் தன் சீஷரில் இரண்டுபேரை அழைத்து,
19 நீங்கள் இயேசுவினிடத்திற்குப் போய்: வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வரக் காத்திருக்கவேண்டுமா? என்று கேளுங்கள் என்று சொல்லி அனுப்பினான்.

கிறித்துவில் வாழ்வு:
ஆவியில் பிறந்த அடியவரும்,
அவ்வப்போதுப் பதறுகிறார்.
பாவியர் துன்பம் கொடுப்பதனால்,
பார்வை விலகித் தவறுகிறார்.
சாவினை நினைத்துச் சாகாமல்,
சரியாய் அவர் பணி செய்திடுவார்,
மேவிய மீட்பைப் பெறுவதுடன்,
மேலும் விண்முடி எய்திடுவார்!
ஆமென்.

No automatic alt text available.
LikeShow More Reactions

யாருக்குப் பெருமை சேர்க்கின்றோம்?

யாருக்குப் பெருமை சேர்க்கின்றோம்?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:16-17.
16 எல்லாரும் பயமடைந்து: மகாதீர்க்கதரிசியானவர் நமக்குள்ளே தோன்றியிருக்கிறார் என்றும், தேவன் தமது ஜனங்களைச் சந்தித்தார் என்றும் சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.

இந்தச் செய்தி யூதேயா தேசமுழுவதிலும் சுற்றியிருக்கிற திசைகள் யாவற்றிலும் பிரசித்தமாயிற்று.

கிறித்துவில் வாழ்வு:
ஊர் புகழும் புகழ்ச்சி எல்லாம்,
உண்மையாக இருக்குமோ?
பேர் பெருமை என்பது எல்லாம்,
பெரிதாய் நன்மை பெருக்குமோ?
நேர்மையென்று இருந்தால் மட்டும்,
நிலைக்கும் அந்த புகழ்ச்சியே.
பார் படைத்த இறை வழியில்,
பாராப் பெருமை இகழ்ச்சியே!
ஆமென்.

Image may contain: text
LikeShow More Reactions

Comment

இளைஞனே எழுந்திரு!

இளைஞனே எழுந்திரு!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 7:11-15.
11 மறுநாளிலே அவர் நாயீன் என்னும் ஊருக்குப் போனார்; அவருடைய சீஷர் அநேகரும் திரளான ஜனங்களும் அவருடனேகூடப் போனார்கள்.
12 அவர் ஊரின் வாசலுக்குச் சமீபித்தபோது, மரித்துப்போன ஒருவனை அடக்கம்பண்ணும்படி கொண்டுவந்தார்கள்; அவன் தன் தாய்க்கு ஒரே மகனாயிருந்தான். அவளோ கைம்பெண்ணாயிருந்தாள்; ஊராரில் வெகு ஜனங்கள் அவளுடனேகூட வந்தார்கள்.
13 கர்த்தர் அவளைப் பார்த்து, அவள் மேல் மனதுருகி: அழாதே என்று சொல்லி,
14 கிட்டவந்து, பாடையைத் தொட்டார்; அதைச் சுமந்தவர்கள் நின்றார்கள்; அப்பொழுது அவர்: வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
15 மரித்தவன் எழுந்து உட்கார்ந்து, பேசத்தொடங்கினான். அவனை அவன் தாயினிடத்தில் ஒப்புவித்தார்.

கிறித்துவில் வாழ்வு:
எண்ணில் அடங்கா இளவயதோர்,
இன்றும் இறந்து கிடக்கின்றார்.
பண்ணும் செயலின் விளைவறியார்,
பாவம் விரும்பி நடக்கின்றார்.
மண்ணே வாழ்வு என மயங்கும்,
மக்கள் தெளியத் தொட்டருளும்.
விண்ணே இரங்கும், விளிக்கின்றேன்.
விரைந்து இவரை மீட்டருளும்!
ஆமென்.

Image may contain: 1 person, outdoor and text
LikeShow More Reactions

Comment

இப்படிப்பட்ட பற்றுறுதி!

இப்படிப்பட்ட பற்றுறுதி!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 7:9-10.
9 இயேசு இவைகளைக் கேட்டு அவனைக் குறித்து ஆச்சரியப்பட்டு, திரும்பி, தமக்குப் பின்செல்லுகிற திரளான ஜனங்களை நோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
10 அனுப்பப்பட்டவர்கள் வீட்டுக்குத் திரும்பிவந்தபோது, வியாதியாய்க்கிடந்த வேலைக்காரன் சுகமடைந்திருக்கிறதைக் கண்டார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
பற்று கொண்டோம் என்றுகூறி,
பலபேர் முன்பு உயர்த்தும் நாம்,
சற்று நேரம் நமது பற்றைச்
சரிதானோவென ஆய்வோம்.
வெற்று வேட்டாய் வெடியாதிருக்க,
வேண்டும் பற்றில் தாழ்மை.
கற்று நாமும் தாழாவிட்டால்,
காண்போம் வாழ்வில் ஏழ்மை!
ஆமென்.

Image may contain: text