தொப்பையும் குப்பையும்!

உடம்பின் அழகை தொப்பை குறைக்கும்.

ஊரின் அழகை குப்பை மறைக்கும்!

தொப்பையும் குறைப்போம்!

குப்பையும் மறைப்போம்!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: 9 people, people standing and crowd

யார் புரட்டுவார் இந்தக் கல்லை?

யார் புரட்டுவார் இந்தக் கல்லை?
நற்செய்தி மாலை: மாற்கு 16:1-4.
” ஓய்வுநாள் முடிந்ததும் மகதலா மரியா, யாக்கோபின் தாய் மரியா, சலோமி ஆகியோர் அவரது உடலில் பூசுவதற்கென்று நறுமணப் பொருள்கள் வாங்கினர். வாரத்தின் முதல் நாள் காலையிலேயே கதிரவன் எழும் வேளையில் அவர்கள் கல்லறைக்குச் சென்றார்கள். ‘ கல்லறை வாயிலிலிருந்து கல்லை நமக்கு யார் புரட்டுவார்? ‘ என்று அவர்கள் ஒருவரோடு ஒருவர் கேட்டுக் கொண்டார்கள். ஆனால் அவர்கள் நிமிர்ந்து உற்று நோக்கியபொழுது கல் புரட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள். அது பெரியதொரு கல்.”
நற்செய்தி மலர்:
இந்தக் கல்லை எடுத்துப்போட,
யார்தான் நமக்கு உதவிடுவார்?
எந்த நாட்டு ஏழை என்றாலும்,
இப்படித்தானே கதறுகிறார்.
அந்தக் கவலை இனிமேல் வேண்டாம்;
அடைத்தக் கல்லோ ஆங்கில்லை;
மைந்தனேசு உயிரோடெழுந்தார்;
மனிதா, உனக்கினி தீங்கில்லை!
ஆமென்.

No automatic alt text available.

கல்லறை ஓன்று புதிதாய் இருக்கும்….

கல்லறை ஓன்று புதிதாய் இருக்கும்….
நற்செய்தி மாலை: மாற்கு 15:46-47.
“யோசேப்பு மெல்லிய துணி ஒன்றை வாங்கி வந்து, இயேசுவின் உடலை இறக்கித் துணியால் சுற்றிப் பாறையில் வெட்டப்பட்டிருந்த கல்லறையில் கொண்டு வைத்தார்; அதன் வாயிலில் ஒரு கல்லை உருட்டி வைத்தார். அவரை எங்கே வைத்தனர் என்பதை மகதலா மரியாவும் யோசேப்பின் தாய் மரியாவும் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர்.”
நற்செய்தி மலர்:
சில்லறை எதுவும் சேர்க்கா இயேசு,
சேரும் இடத்தைப் பாருங்களே.
கல்லறை ஒன்று புதிதாய் இருக்கும்
காட்சியும் காண, வாருங்களே.
நல்லவர் இறப்பும் நன்கு முடியும்;
நன்றியில் நினைவு கூருங்களே.
எல்லோரையும் ஏற்றுக் கொள்ளும்,
இறைவனின் அரசில் சேருங்களே!
ஆமென்.

Image may contain: outdoor and nature