இயேசு வழியில் இன்புற்றிருப்பீர்!
நற்செய்தி மாலை: மாற்கு 16:19-20.
“இவ்வாறு அவர்களோடு பேசிய பின்பு ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார். அவர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினர். ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு, நிகழ்ந்த அரும் அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார்.”
நற்செய்தி மலர்:
விண்ணைவிட்டு இறைவன் வந்தார்;
விடுதலை வாழ்வை மகனாய்த் தந்தார்.
மண்ணைவிட்டு விண்ணகம் சென்றார்;
மறுபடி இறையாய் சேர்ந்திருக்கின்றார்.
கண்ணைப் பெற்றோர் நம்பி வாரீர்;
கடவுள் அருளால் நன்மை சேரீர்.
எண்ணம் செயலில் அன்பாயிருப்பீர்.
இயேசு வழியில் இன்புற்றிருப்பீர்!
ஆமென்.
(எழுதி வெளியிடுவோர்: கெர்சோம் செல்லையா.
இறையன்பு இல்லம், எண்:24, செயலகக் குடியிருப்பு,
இரட்டை ஏரி, குளத்தூர், சென்னை- 600099.
தொலைத் தொடர்புகள்: 91+ 9444 628 400, 044-2565 5000 & 2565 6000).