வாழ்வின் பொருள்

நல்வாழ்த்து:
வாழ்வின் பொருள் என்னவென்று,
வழி தெரியாது கேட்பவரே,
தாழ்வில் நம்மை நினைத்துயர்த்தும்,
தந்தை இறையைப் புகழுவதே!

நல்வாக்கு:
மத்தேயு 26:57-58.
தலைமைச் சங்கத்தின் முன்னிலையில் இயேசு:
“இயேசுவைப் பிடித்தவர்கள் அவரைத் தலைமைக் குரு கயபாவிடம் கூட்டிச்சென்றார்கள். அங்கே மறைநூல் அறிஞரும், மூப்பர்களும் கூடி வந்தார்கள். பேதுரு தொலைவில் அவரைப் பின்தொடர்ந்து தலைமைக் குருவின் வீட்டு முற்றம்வரை வந்து வழக்கின் முடிவைப்பற்றித் தெரிந்து கொள்வதற்காக உள்ளே நுழைந்து காவலரோடு உட்கார்ந்திருந்தார்.”

நல்வாழ்வு:
கற்றவர் என்று காட்டுகிறார்;
கயமைத்தனத்தையே கூட்டுகிறார்.
மற்றவர் தன்மையை மதியாது,
மடையர் என்று ஆட்டுகிறார்!
பெற்றது அறிவாய் இருக்குமெனில்,
பெருந் தன்மையைக் கொண்டிருப்பார்.
கொற்றவர் இறைவன் கூற்றறிந்து,
கொடுமையை நீக்கி ஆண்டிடுவார்!
ஆமென்.

நல்வாழ்த்து:
வாழ்வின் பொருள் என்னவென்று,
வழி தெரியாது கேட்பவரே,
தாழ்வில் நம்மை நினைத்துயர்த்தும்,
தந்தை இறையைப் புகழுவதே!

நல்வாக்கு: 
மத்தேயு 26:57-58.
தலைமைச் சங்கத்தின் முன்னிலையில் இயேசு:
"இயேசுவைப் பிடித்தவர்கள் அவரைத் தலைமைக் குரு கயபாவிடம் கூட்டிச்சென்றார்கள். அங்கே மறைநூல் அறிஞரும், மூப்பர்களும் கூடி வந்தார்கள். பேதுரு தொலைவில் அவரைப் பின்தொடர்ந்து தலைமைக் குருவின் வீட்டு முற்றம்வரை வந்து வழக்கின் முடிவைப்பற்றித் தெரிந்து கொள்வதற்காக உள்ளே நுழைந்து காவலரோடு உட்கார்ந்திருந்தார்."
நல்வாழ்வு:
கற்றவர் என்று காட்டுகிறார்;
கயமைத்தனத்தையே கூட்டுகிறார்.
மற்றவர் தன்மையை மதியாது,
மடையர் என்று ஆட்டுகிறார்!
பெற்றது அறிவாய் இருக்குமெனில், 
பெருந் தன்மையைக் கொண்டிருப்பார்.
கொற்றவர் இறைவன் கூற்றறிந்து,
கொடுமையை நீக்கி ஆண்டிடுவார்!
ஆமென்.
 

Leave a Reply