நற்செய்தி

வாழ வைக்கும் வாக்கு;
வாசித்தறிய நோக்கு!
நல்வாழ்த்து:
ஏழை என்னை மீட்டிடவே
ஏழையான இறைமகனே,
தாழ விழுந்து பணிகின்றேன்;
தாங்கிக் காப்பீர் என்னையுமே!
நல்வாக்கு: மத்தேயு 26:3-5.
”அதே நேரத்தில் தலைமைக் குருக்களும் மக்களின் மூப்பர்களும் கயபா என்னும் தலைமைக் குருவின் மாளிகை முற்றத்தில் ஒன்று கூடினார்கள். இயேசுவைச் சூழ்ச்சியாய்ப் பிடித்துக் கொலை செய்ய அவர்கள் கலந்து ஆலோசித்தார்கள். ” ஆயினும் விழாவின்போது வேண்டாம்; மக்களிடையே கலகம் ஏற்படக்கூடும் ‘ என்று அவர்கள் பேசிக் கொண்டார்கள்.”
நல்வாழ்வு:
கற்றவர் என்று பெயரிருந்தும்,
கயமை நெஞ்சு கொண்டிருந்தால்,
மற்றவர் மதித்து புகழுரையார்;
மடையரும் இவரும் ஒன்றென்பார்!
பற்றின் தலைவன் இயேசுவினைப்
பதுங்கிக் கொல்ல முயன்றவர் யார்?
சற்றும் அறியா எளியவரா?
சரியாய் எண்ணித் திருந்தப் பார்!
ஆமென்.