கிறித்துவின் வீடு!கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:57-58.
57அவர்கள் வழியிலே போகையில் ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான். |
58அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார். கிறித்துவில் வாழ்வு: கூடில்லாத குருவியும் இல்லை; குழியில்லாத நரியும் இல்லை. பாடில்லாத மனிதரும் இல்லை. படைத்தவர்க்கிங்கு வீடும் இல்லை. கோடிகள் கூட்டி ஆளவும் இல்லை. கோபுரம் கட்டி வாழவும் இல்லை. கேடில்லாது திருப்பணி செய்வேன்; கிறித்துவின் வீடே எனது எல்லை! ஆமென். |