தொடங்கும் பலர் முடிப்பதில்லை!கிறித்துவின் வாக்கு: லூக்கா 14:28-30.
28 உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்ட மனதாயிருந்து,
29 அஸ்திபாரம் போட்டபின்பு முடிக்கத் திராணியில்லாமற்போனால், பார்க்கிறவர்களெல்லாரும்:
30 இந்த மனுஷன் கட்டத்தொடங்கி, முடிக்கத் திராணியில்லாமற்போனான் என்று சொல்லித் தன்னைப் பரியாசம்பண்ணாதபடிக்கு, அதைக் கட்டித் தீர்க்கிறதற்குத் தனக்கு நிர்வாகமுண்டோ இல்லையோ என்று முன்பு அவன் உட்கார்ந்து செல்லுஞ்செலவைக் கணக்குப் பாராமலிருப்பானோ?
கிறித்துவில் வாழ்வு:
தொடங்கிய பலபேர் முடிப்பதில்லை;
தொடர விரும்பியும் முடிவதில்லை.
கிடங்குகள் நிறையப் பொருளிருந்தும்,
கிறித்து இலாததால், படியவில்லை.
முடங்கிட விரும்பா கிறித்தவரோ,
முதலில் இறைவன் முடிவறிவார்.
அடங்கிய நெஞ்சு அமைந்தவராய்,
ஆண்டவர் முடிக்க, அடிநடப்பார்!
ஆமென்.