துணிந்து செல்லுதல்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 22:54-55.
54 அவர்கள் அவரைப் பிடித்தபின்பு, பிரதான ஆசாரியனுடைய வீட்டில் கொண்டுபோய் விட்டார்கள். பேதுருவும் தூரத்திலே பின்சென்றான்.
55 அவர்கள் முற்றத்தின் நடுவிலே நெருப்பை மூட்டி, அதைச் சுற்றி உட்கார்ந்தபோது, பேதுருவும் அவர்கள் நடுவிலே உட்கார்ந்தான்.
கிறித்துவில் வாழ்வு:
தொடர்ந்து செல்லும் துணிவை அங்கே,
தூயோன் பேதுருவிடம் கண்டோம்.
கிடந்தது தேம்பி அழுது நிற்காமல்,
கிறித்துவைத் தொடரும் நிலை கண்டோம்.
இடர் நிறைந்த இடங்களிலெல்லாம்,
எப்படி இயேசுவின் பின் செல்வோம்?
சுடரொளியாய் வெளிச்சம் தருவார்;
சுட்டும் வழியில் நாம் செல்வோம்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.