குருட்டுக் கண்கள்!
இருட்டை இருட்டாய்ப் பார்க்காமல்
இதுதான் பகலின் விளக்கென்றார்.
திருட்டைத் திருட்டாய் நோக்காமல்,
திறமை என்றும் அளக்கின்றார்.
குருட்டுக் கண்கள் உடையவர்தான்,
கொடுமைத் தீர்ப்பு எழுதிடுவார்.
விரட்டும் விருப்பும் இங்கில்லை;
விண்ணின் தீர்ப்பில் அழுதிடுவார்!
-கெர்சோம் செல்லையா.