இறைவேண்டல்

நல்வாழ்த்து:
கேட்கும் ஏழையர் பெறுவதற்கு,
கிறித்துவின் அருளைக் கேட்கின்றோம்.
மீட்பைக் கண்கள் காண்பதற்கு,
மேலும் நெஞ்சைத் திறக்கின்றோம்.
வேட்கை வேறு எதுவுமில்லை.
விருப்பம் உமதே தொழுகின்றோம்.
நாட்கள் வேண்டும் உழைப்பதற்கு;
நம்பி உம்மைப் பணிகின்றோம்!

நல்வாக்கு: மத்தேயு 26:36-37.

கெத்சமனித் தோட்டத்தில் இயேசு:

“பின்னர் இயேசு சீடர்களுடன் கெத்சமனி என்னும் இடத்திற்கு வந்தார். அவர், ‘ நான் அங்கே போய் இறைவனிடம் வேண்டும்வரை இங்கே அமர்ந்திருங்கள் ‘ என்று அவர்களிடம் கூறி, பேதுருவையும் செபதேயுவின் மக்கள் இருவரையும் தம்முடன் கூட்டிச் சென்றார். அப்போது அவர் துயரமும் மனக்கலக்கமும் அடையத் தொடங்கினார்.”

நல்வாழ்வு:

அழுதிட ஆயிரம் குறையிருந்தும்,
அவற்றை ஆண்டவர் ஒதுக்கிவிட்டு,
தொழுது இறையிடம் கேட்டதெல்லாம்
தொலைந்தோர் மீட்பைக் குறித்தாமே.
விழுந்து வேண்டும் இறைமகனின்
விருப்பை இன்று அறிந்துவிட்டு,
எழுந்து நமக்காய் அழுவதெல்லாம்,
ஏற்றது இல்லை அறிவோமே!
ஆமென்.

தேயிலைச் செய்தி!

இப்படி எனக்குத் தோட்டமில்லை;
இருப்பினும் இவ்வழி செல்கின்றேன்.
எப்படி இறைவன் தந்தாரோ,
அவற்றில் நிறைவு அடைகின்றேன்!
முப்படி உணவு எனக்கதிகம்;
மூன்று முறையும் தருகின்றார்.
அப்படி அளித்திடத் தகுதியில்லை;
ஆயினும் அன்பால் நிறைக்கின்றார்!-கெர்சோம் செல்லையா.

Photo: தேயிலைச் செய்தி!

இப்படி எனக்குத் தோட்டமில்லை;

இருப்பினும் யானும் செல்கின்றேன்.

எப்படி இறைவன் தந்தாரோ,

அவற்றில் நிறைவு அடைகின்றேன்!

முப்படி உணவு எனக்கதிகம்;

மூன்று முறையும் தருகின்றார்.

அப்படி அளித்திடத் தகுதியில்லை;

ஆயினும் அன்பால் நிறைக்கின்றார்!

-கெர்சோம் செல்லையா.

ஒளியே , நான் புகழ்வது, இறை மொழியே!

நல்வாழ்த்து:
இன்பம் ஊட்டும் இயற்கை ஒளியே,
எடுத்துச் சொல்ல மறப்பின் பழியே.
உன்னைப் படைத்த இறையின் மொழியே,
உண்மையில் அழகு; அதுதான் வழியே!
நல்வாக்கு;மத்தேயு 26:33-35.
“அதற்குப் பேதுரு அவரிடம், ‘ எல்லாரும் உம்மை விட்டு ஓடிப் போய்விட்டாலும் நான் ஒரு போதும் ஓடிப்போக மாட்டேன் ‘ என்றார். இயேசு அவரிடம், ‘ இன்றிரவில் சேவல் கூவுமுன் மும்முறை நீ என்னை மறுதலிப்பாய் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன் ‘ என்றார். பேதுரு அவரிடம், ‘ நான் உம்மோடு சேர்ந்து இறக்க வேண்டியிருந்தாலும் உம்மை ஒருபோதும் மறுதலிக்க மாட்டேன் ‘ என்றார். அவ்வாறே சீடர்கள் அனைவரும் சொன்னார்கள்.”
நல்வாழ்வு:
ஊன் உணர்வில் உரைப்பதுவும்
உண்மையாய் இருக்காது.
நான் முடிப்பேன் என்பதுவும்
நடுவீட்டைத் தாண்டாது.
தேன் மதுரத் தமிழ்ப்பாவும்,
தெவிட்டாமல் இருக்காது.
வான் அரசர் திருவாக்கோ
வழுவாது நிற்கிறது!
ஆமென்.

பாறையுள்ளும் பாயும் ஒளியே!

நல்வாழ்த்து:
ஓடும் வாழ்வின் உண்மை தேடும்;
உணர்வடைந்து இறையைப் பாடும்.
நாடும் நன்மை நம்மை நாடும்;
நம்புவோர்க்கு யாவும் கூடும்!
நல்வாக்கு: மத்தேயு 26:31-32
“அதன்பின்பு இயேசு அவர்களிடம்,”இன்றிரவு நீங்கள் அனைவரும் என்னை விட்டு ஓடிப்போவீர்கள். ஏனெனில்”ஆயரை வெட்டுவேன், அப்போது மந்தையிலுள்ள ஆடுகள் சிதறடிக்கப்படும்” என்று மறைநூலில் எழுதியுள்ளது. நான் உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு உங்களுக்கு முன்பே கலிலேயாவுக்குப் போவேன்” என்றார்.”
நல்வாழ்வு:
கல்லாய் நெஞ்சம் மாறுவதாலே,
கடவுளை விட்டுஅகன்றிடலாம்.
சொல்லாம் ஒளிச்சுடர் சூழுவதாலே,
சூது நீங்கிச் சேர்ந்திடலாம்.
எல்லா உறவும் இறையுடன் மகிழ,
எளியோர் நாமும் வேண்டிடலாம்.
நல்லோராக மாற்றும் இறையை
நம்பி நாமும் வாழ்ந்திடலாம்!
ஆமென்.

மலர்ப்படுக்கை

இதுதான் வாழ்க்கைப் படுக்கை!
மலர்ப்படுக்கை வாழ்க்கைக் கேட்டேன்;
இலைப் படுக்கை கிடைத்ததுவே!
விலையுயர்ந்த வேலை எனினும்,
தலை சாய்த்தால் விழுவேனே!-கெர்சோம் செல்லையா.

Photo

ஆயரே, ஆண்டவரே!

நல்வாழ்த்து:
ஆட்டை மேய்க்கும் ஆயன்போல்
ஆண்டவர் தருவதில் மகிழ்வாயே.
வேட்டையாடுதல் விட்டு விட்டு,
விண்ணின் விருப்பில் தொழுவாயே!
நல்வாக்கு: மத்தேயு 26:29-30.
இனிமேல் என் தந்தையின் ஆட்சி வரும் அந்நாளில்தான் நான் உங்களோடு திராட்சைப் பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை குடிக்கமாட்டேன் என நான் உங்களுக்குச் சொல்கிறேன் ‘என்றார். அவர்கள் புகழ்ப் பாடல் பாடிவிட்டு ஒலிவ மலைக்குச் சென்றார்கள்.”

நல்வாழ்வு:
துன்பக் குவளை கையினிலே;
நன்றிப் பாவோ வாயினிலே!
என்னில் இல்லா இப்பண்பே,
உன்னில் கண்டு கேட்டேனே!
முன்பு நானும் நோவினிலே,
சொன்னவையோ சுடுமொழியே.
இன்று எண்ணி வருந்துகிறேன்;
மன்னிப்பாயா இறைமகனே!
ஆமென்.
Jesus-Good-Shepherd-guides-me

வேண்டத் தெரியேன்

நல்வாழ்த்து:
வேண்டத் தெரியா எளியனுக்கு,
வேண்டுதல் செய்யும் இறைமகனே,
பாண்டித் தமிழால் உனைப் பாடி
பாராட்டிட நான் வந்தேனே.
தோண்டத் தோண்டப் பெருகிவரும்,
துரவின் தெளிந்த நீரைப்போல்
மீண்டும் மீண்டும் வாக்கருளி,
மீட்பதோ உனது திருக்கடனே!
Desert Water Mobile Wallpaper

நல்வாக்கு: மத்தேயு 26:26-28.

ஆண்டவரின் திருவிருந்து
”அவர்கள் உணவருந்திக்கொண்டிருந்தபொழுது, இயேசு அப்பத்தை எடுத்துக் கடவுளைப் போற்றி, அதைப் பிட்டுச் சீடருக்குக் கொடுத்து, ‘ இதைப் பெற்று உண்ணுங்கள்; இது எனது உடல் ‘ என்றார். பின்பு கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்து, ‘ இதில் உள்ளதை அனைவரும் பருகுங்கள்; ஏனெனில் இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருடைய பாவ மன்னிப்புக்காகச் சிந்தப்படும் இரத்தம்.”
நல்வாழ்வு:

உம்முடல் உணவாயிற்று;
உதிரமோ சாறாயிற்று;
நம்பினேன் வாக்கைப் பெற்று;
நன்மையே உண்டாயிற்று!
தம்முடல் வாழ்விற்கென்று
தவற்றினை உண்போர் இன்று,
செம்பொருள் அறிதல் நன்று,
சிலுவையின் அன்பினின்று!
ஆமென்.

கலப்பையின் மேல் கைவைத்தேன்

நல்வாழ்த்து:
கலப்பை மேலே கையை வைத்துக்
கற்பாறையிலே உழுகின்றேன்.
நிலத்தடி நீரை மேலே கொணர்ந்து,
நித்தமும் செடிக்குப் பாய்ச்சுகின்றேன்.
விலக்கப்பட்ட களைகள் அகற்றி,
வேண்டிய உரமும் இடுகின்றேன்.
பலவித பணிகள் நான் செய்தாலும்,
பலனோ உம் அருள், பணிகின்றேன்!
நல்வாக்கு: மத்தேயு 26:23-25.
“அதற்கு அவர், ‘ என்னுடன் பாத்திரத்தில் தொட்டு உண்பவனே என்னைக் காட்டிக் கொடுப்பான். மானிட மகன், தம்மைப் பற்றி மறைநூலில் எழுதியுள்ளபடியே போகிறார். ஆனால், ஐயோ! அவரைக் காட்டிக் கொடுக்கிறவனுக்குக் கேடு; அம்மனிதன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாயிருந்திருக்கும் ‘ என்றார். அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசும் ‘ ரபி, நானோ? ‘ என அவரிடம் கேட்க இயேசு, ‘ நீயே சொல்லிவிட்டாய் ‘ என்றார்.”

நல்வாழ்த்து:

உடன் பிறந்தோர் ஒளிந்திட்டார்;
உண்மை இன்றி மறைந்திட்டார்.
கடன் பட்டோர் கைவிட்டார்;
கவலைக் குழியில் தள்ளிட்டார்.
இடம் தெரியா என்னண்டை
இயேசு மட்டும் இருக்கின்றார்.
வடம் பிடித்து உயர்த்தி எனை
வாழ வைத்துக் காக்கின்றார்!
ஆமென்.

இணைப்பவர்தாம், ஊழியராம்!

இணைக்கும் இறைப்பணி!

எளியோர் கடக்கும் இச்சிறு பாலமும்,
இணைக்கும் பணியைச் செய்கிறதே.
ஒளிமயமான இறையுடன் சேர்க்கும்
ஊழியம் பாலம் போன்றதுவே.

தெளிவைக் கொடுக்கத் தேவை எதுவோ,
தெய்வத்தின் ஆவி தந்திடுமே.
வளியாய், நீராய், நெருப்பாய் வந்து,
வழி நடத்தி இணைத்திடுமே!

-கெர்சோம் செல்லையா.

Photo

அதுவும் எட்டவில்லை!

கண் கலங்க வைத்த புகைப்படம்..

மீந்து போன உணவுகளை குப்பையில் கொட்டாமல் ,
ஏழை மக்களுக்கு கொடுங்கள்...

அவர்களின் வாழ்த்துகள் உங்களை நிச்சயமாக உயர்த்தும்....

visit our page__> புரட்சி            :'(
சென்னையில் அம்மா உணவிருந்தும்,
சிறியருக் கதுவும் எட்டவில்லை!
இன்னிலை நீங்க என் செய்வோம்?
ஏழையில் இயேசுவைப் பார்த்திடுவோம்!
-கெர்சோம் செல்லையா.