முடிவாய் வருகிற உயிர்ப்பு!  
கிறித்துவின் வாக்கு: லூக்கா 24:17-21.  

கிறித்துவில் வாழ்வு: 
அடியார் என்று பெயர் பெற்றும், 
அறியாமையும் தொடர்கிறது.     
படியார் பாரார்; அது வரைக்கும்,     
பாவப் பண்பும் படர்கிறது.    
துடியாய்த் துடித்து இறந்திருந்தும், 
தூயனுயிர்ப்பும் தெரிகிறது.  
முடிவாய் வருவது உயிர்ப்பாகும்;      
முக்காலமும் புரிகிறது!  
ஆமென். 
-கெர்சோம் செல்லையா.  

Leave a Reply