பின்னால் நிற்கும் இயேசுவுக்கே!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 24:28-29.
கிறித்துவில் வாழ்வு:
முன்பின் தெரியார் என்றாலும்,
முகம் அறியார் வந்தாலும்,
அன்பாய் ஏற்று அமுதளிக்கும்,
அரிய பண்பைக் கொண்டோமா?
இன்னாள் இப்படி நாம் செய்யும்,
எல்லா நன்மை உதவிகளும்,
பின்னால் நிற்கும் இயேசுவுக்காம்;
பிறரில் இறையைக் கண்டோமா?
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.