எண்பதும்! இருபதும்!

எண்பதும் இருபதும்!


ஐந்தில் ஒன்றை அடிக்க இன்று,

ஐந்தில் நான்கு துடிக்கிறது.

மந்தை ஒன்றைத் திரட்டிச் சென்று,

மத வெறியாலே பிடிக்கிறது.

“இந்திய நாட்டின் மக்கள் ஒன்று”

என்னும் நினைப்பே வெடிக்கிறது.

எந்தன் காலே, தலைமேல் நின்று,

என் உயிரைக் குடிக்கிறது!


-கெர்சோம் செல்லையா.

மெய்!

மெய் அறிவீர்!நற்செய்தி: யோவான்: 6:45-47.45.

எல்லாரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தீர்க்கதரிசிகளின் ஆகமத்தில் எழுதியிருக்கிறதே; ஆகையால் பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக்கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான்.46. தேவனிடத்தினின்று வந்தவரே தவிர வேறொருவரும் பிதாவைக் கண்டதில்லை, இவரே பிதாவைக் கண்டவர்.47. என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

நல்வழி:

மெய்மை நாடின், மெய்மை காண்பார்;

மேன்மை வாழ்வு பெற்றிடுவார்.

பொய்மை தேடின், பொய்மை காண்பார்;

பொல்லா வழியே கற்றிடுவார்.

தூய்மைப் பண்பே தெய்வம் என்பார்,

திருமகன் ஏசுவில் கண்டிடுவார்.

வாய்மை எங்கே? அங்கே, இறை பார்!

வராதார் அழிவே அண்டிடுவார்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

இழுக்கும் இறை!

இழுக்கும் இறைவன்!
நற்செய்தி: யோவான் 6:43-44.
43. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: உங்களுக்குள்ளே முறுமுறுக்கவேண்டாம்.
44. என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்.
நல்வழி:
தந்தை இழுக்க, மைந்தன் அழைப்பார்.
தாவி அணைக்கும் ஆவியர் உழைப்பார்.
விந்தை அரசுள் வேந்தன் நுழைப்பார்.
விடுதலையாளர் கண் விழிப்பார்.
நிந்தை நீக்கும் இறைமகன் வருவார்.
நேர்மைக்குரிய பரிசைத் தருவார்.
எந்தை தாயும் உறவும் பெறுவார்.
இறையருளாளர் இன்பமுறுவார்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.