நம்பவில்லை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 24:22-24.
கிறித்துவில் வாழ்வு:
பெண்கள் வாக்கும் கேட்பதில்லை;
பெரியோர் அறிவும் ஏற்பதில்லை.
கண்கள் இருந்தும் திறப்பதில்லை.
காரிருள் நெஞ்சும் சிறப்பதில்லை.
நண்பா, நம்மிலும் இந்த நிலை.
நம்ப மறுக்கும் மந்த நிலை.
பண்பால் சிறப்பது எந்த நிலை?
பற்றெனப் பற்றும் அந்த நிலை!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.