நல்லடக்கம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 23:52-53.
கிறித்துவில் வாழ்வு:
நல்லறை வீடு இல்லாரும்,
நாட்டின் எதிரி என்பாரும்,
கொல்லப்படுகிற வேளைகளில்,
கொளுத்தப்படுவதைக் காண்போரே,
செல்லப் பிள்ளை இயேசுவிற்குச்
சேர ஓரிடம் இலாதிருந்தும்,
கல்லறை ஓன்று கன்மலையில்,
கட்டியிருந்ததைக் காண்பீரே.
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.