மறையும் கதிரோன்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 23:44-45.
கிறித்துவில் வாழ்வு:
இருள் போக்கும் திட்டம் என்று,
இறைமகனார் தொங்கக் கண்டு,
பொருள் கூறும்படியாய்ச் சென்று,
போனதே கதிரோன் அன்று.
திரள் துன்பம் தொடர்ந்து இன்று,
தீங்கைத்தான் தருதல் கண்டு,
மருள் உற்ற வேளை போன்று,
மறைவது நமக்கும் நன்று!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.