நாள்தோறும் நற்செய்தி

கேட்க விரும்பும் நெஞ்சம் கொண்டு
கிறித்துவின் வாக்கைக் கேட்போமா?
ஏக்கம் நீங்கி, இன்பம் பெற்று
இறைமகனைப் புகழ்வோமா?
நல்வாழ்த்து:
வறியவர்க்கு வாழ்வளிக்கும்
வல்ல இறையே போற்றுகிறேன்.
நெறி தவறாத வாழ்வைக் கேட்டு,
நித்தம் உம்மைப் புகழுகிறேன்.
குறி தவறியே வாழ்ந்திருந்தும்
குறை களைந்தீர், போற்றுகிறேன்.
அறிவுப் பாதையில் அழைத்தீர்;
அன்பில் நடந்து புகழுகிறேன்!
நல்வாக்கு:
மத்தேயு 24:36
மானிடமகன் வரும் நாளும் வேளையும்:

 ” அந்த நாளையும் வேளையையும் பற்றித் தந்தை ஒருவருக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது. விண்ணகத் தூதருக்கோ மகனுக்கோகூடத் தெரியாது”
நல்வாழ்த்து:
எந்த நாள் வருவீரென்று,
அந்த நிலையில் அறியவில்லை.
இந்த நாளை இன்றறிவீர்;
வந்து மீளும் இறைமகனே!
ஆமென்.