விற்று விட்டு வா!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 18:22-23.
22 இயேசு அதைக் கேட்டு: இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.
23 அவன் அதிக ஐசுவரியமுள்ளவனானபடியினால், இதைக் கேட்டபொழுது, மிகுந்த துக்கமடைந்தான்.
கிறித்துவில் வாழ்வு:
விட்டுவிட்டே வரவில்லை;
விற்றுவிட்டுத் தருவோமா?
பட்டு மெத்தை படுக்கையிலும்,
பணம் உண்டு, விடுவோமா?
தட்டுகின்ற இயேசுயென்றால்,
தங்கத்திலும் தருவோம் நாம்.
வட்டிலிலே உணவு இல்லா
வறியரெனில் கொடுப்போமா?
ஆமென்.