யாவரும் பெற்றிட உரைக்கின்றோம்!

யாவரும் பெற்றிட உரைக்கின்றோம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:38-39
38 பிசாசுகள் நீங்கின மனுஷன் அவரோடேகூட இருக்கும்படி உத்தரவு கேட்டான்.
39 இயேசு அவனை நோக்கி: நீ உன் வீட்டுக்குத் திரும்பிப்போய், தேவன் உனக்குச் செய்தவைகளையெல்லாம் அறிவி என்று சொல்லி, அவனை அனுப்பிவிட்டார். அந்தப்படி அவன் போய், இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லாம் பட்டணத்தில் எங்கும் பிரசித்தப்படுத்தினான்.

கிறித்துவில் வாழ்வு:
சமயம் மாற்றவும் உரைக்கவில்லை.
சாதிப் பற்றிலும் குரைக்கவில்லை.
இமயம் தொட்டு, குமரி வரை,
எவரை ஆளவும் பரப்பவில்லை.
அமைதி அளிக்கும் மீட்புதனை,
அருளும் ஆண்டவர் அன்புதனை,
எமது வாழ்வு கண்டதுபோல்,
யாவரும் காணவே உரைக்கின்றோம்!
ஆமென்.

Leave a Reply