மணலும் பாறையாகும்!
நற்செய்தி: யோவான் 1:40-42.
மணலை எடுத்துப் பாறையாக்கும்,
மலை வலிவு கொண்டவரே,
தணலை மாற்றி ஆறு வடிக்கும்,
தலை சிறந்த ஆண்டவரே,
பணமே வாழ்வு என்று ஓடும்,
பாழ் நிலையை உருமாற்றி,
குணமாய் நிறையும் குன்று ஆக்கும்,
கொல் கதாவில் மாண்டவரே!
ஆமென்.
-செல்லையா.