நஞ்சுடையும் நாள் வருமுன்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 21:9-11.
9 யுத்தங்களையும் கலகங்களையுங்குறித்து நீங்கள் கேள்விப்படும்போது, பயப்படாதிருங்கள்; இவைகள் முன்னதாகச் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும் முடிவு உடனே வராது என்றார்.
10 அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்.
11 பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், கொள்ளைநோய்களும் உண்டாகும்; வானத்திலிருந்து பயங்கரமான தோற்றங்களும் பெரிய அடையாளங்களும் உண்டாகும்.
கிறித்துவில் வாழ்வு:
நெஞ்சதிர, நிலம் அதிர,
நெடும்போரின் முரசதிர,
வஞ்சகரின் வெறிச் செயல்கள்
வானதிர முழங்கிடுதே.
பஞ்சத்தினால் பசிச்சாவும்,
பாழ் நோயும் பரவிவர,
நஞ்சுடையும் நாள் வருமுன்,
நல்மீட்பு வழங்கிடுமே!
ஆமென்.